கிங் ஸ்ட்ரீட் சம்பவம் – சந்தேகநபரின் புகைப்படம் வெளியானது!

ஒரு வணிக கட்டிடத்தின் கதவை உடைத்து உள்ளே சென்று மின் உபகரணங்களை சேதப்படுத்திய நபரின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 22 ஆம் திகதி கிங் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் பாதுர்ஸ்ட் ஸ்ட்ரீட் பகுதீயில் உள்ள ஒரு வணிக நிறுவனம் ஒன்றில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் கதவை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்ததுடன் அங்கிருந்த மின்னணு உபகரணங்களை நீக்கியதுடன் பின்னர் அங்கிருந்து ஓடிவிட்டார்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் தொடர்புடையவர் சுமார் 35 முதல் 40 வயதுடையவர்க இருக்கலாம் என்றும் அவர் இறுதியாக ஒரு கருப்பு தொப்பி, ஒரு கருப்பு ஆடை மற்றும் நீல ஜீன்ஸ் அணிந்திருந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த விடயங்கள் தொடர்பில் மேலதிக தகவல்கள் தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் தெரிந்தால் பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *