சிட்னி டெஸ்ட் – அவுஸ்ரேலிய அணிக்குள் முக்கிய வீரர்!

இந்தியாவுக்கு எதிரான சிட்னியில் நடைபெறவுள்ள இறுதி டெஸ்ட் போட்டிக்கான ஆஸி அணியில் அவுஸ்ரேலியாவின் லெக் ஸ்பின்னிங் சகலதுறை வீரரான மார்னஸ் லாபுஸ்சாக்னே இணைக்கப்பட்டுள்ளார்.

3 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணிக்கு எதிராக விளையாடிய குழாமில் இருந்து (13 பேர்) எவரும் அணியில் இருந்து நீக்கப்படவில்லை.

ஆனால் சிட்னி மைதானத்தின் ஆடுகளத்தில் சுழற்பந்துக்கு சாதகமானதாகும். இந்நிலையில் மார்னஸ் லாபுஸ்சாக்னே இணைக்கப்படலாம் என அணித்தலைவர் டிம் பெயின் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி இன்று முடிவுக்கு வந்துள்ள நிலையில், மெல்போர்னில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

குறித்த ஆடுகளமானது சுழற்பந்துக்கு சாதகமாக அமையும் எனபதால் நாம் அது தொடர்பில் விரிவாக ஆராயவுள்ளோம். அத்தோடு அந்த டெஸ்ட் போட்டியையும் வெல்ல கடும் முயற்சியுடன் செயற்படுவோம். என கூறினார்.

இதுவரை இரு டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ள மார்னஸ் லாபுஸ்சாக்னே 81 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன் அவரது சராசரி 52.94 ஆக உள்ளது. இதேவேளை இந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் 7 விக்கெட்களை வீழ்த்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *