தேர்தலை நடத்தாத தமிழக அரசாங்கத்தை ஆளுநர் கலைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

உள்ளூராட்சி தேர்தலை நடத்தாத தமிழக அரசாங்கத்தை ஆளுநர் கலைக்க வேண்டுமென அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

திண்டுக்கலில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற கிறிஸ்மஸ் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“தமிழகத்தில் வெற்றிடமாகவுள்ள 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்துகின்றது.

மேலும், மத்திய அரசு, தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய 6 ஆயிரம் கோடி இந்திய ரூபாயை இதனால் நிறுத்தி வைத்துள்ளது. ஆகையால் ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தமிழக அரசாங்கத்தை கலைத்து விட்டு, உள்ளூராட்சி தேர்தலை நடத்தலாம்.

இதேவேளை உள்ளூராட்சியில் பிரதிநிதிகள் இல்லாததால்தான் சில பகுதிகளில் கஜா புயல் மீட்பு பணிகள் தாமதமடைகின்றன” என அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *