பங்களாதேஷ் பொதுத் தேர்தல் : வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்!

பங்களாதேஷில் பலத்த பாதுகாப்புடனும், சில வன்முறைச் சம்பவங்களுடனும் நிறைவடைந்த பொதுத் தேர்தலை அடுத்து வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தொடக்கம் இடம்பெற்ற நாடளாவிய வாக்களிப்பு நடவடிக்கைகளின் போது குறிப்பிடத்தக்க மோசடிகள் இடம்பெற்றதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

இருந்தபோதும், பெரும்பாலும் தேர்தல் வாக்களிப்பு பணிகள் அமைதியான முறையில் இடம்பெற்றதாகவும், வாக்குகளை எண்ணும் பணிகளுக்காக தாம் ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் தேர்தல் ஆணையகத்தின் பேச்சாளர் முபிபர் ரஹ்மான் தெரிவித்தார்.

அத்துடன் தேர்தல் பெறுபேறுகளை மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்திருப்பதாக பங்களாதேஷ் வாக்காளர்கள் கூறுகின்றனர்.

இந்தத் தேர்தலில் பிரதமர் ஷேய்க் ஹசீனாவிற்கு மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *