மில்டன் பகுதியில் வாகன விபத்து – வாரத்தின் பின்னர் ஒருவர் உயிரிழப்பு!

மில்டன் பகுதியில் இடம்பெற்ற ஒரு வாகன விபத்தை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒரு வாரம் கழித்து இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு பிக் அப் டிரக் வகை வாகனம் ஒன்று கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி 4 மணியளவில் மோதி விபத்துக்குள்ளாகியதாக ஹொல்டன் பிராந்திய பொலிஸ் தெரிவித்தனர்.

இதன் பின்னர் சம்பவத்தில் படுகாயமடைந்த சாரதி உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் உயிரிழந்தவர் 77 வயதுடையவர் என அடையாளம் கண்டுகொண்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் அவர் ஒன்ராறியோ ராக்வுட் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் தொடர்பும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *