ரொறன்ரோவில் ஒரே இரவில் 4 துப்பாக்கிச் சூடு, 3 கத்திக்குத்து சம்பவம்!

ரொறன்ரோவில் நேற்று முன்தினம் இரவுநேரப் பொழுதில் மாத்திரம் நான்கு பேர் சுடப்பட்டதுடன், மேலும் மூன்று பேர் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் வெள்ளி இரவிலிருந்து சனிக்கிழமை அதிகாலை வரையிலான நேரத்தில் இந்த தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

ஃபின்ச் அவென்யூவிற்கு வடக்கே, றவுண்ட்ரீ வீதி மற்றும் கிப்ளிங் அவென்யூ பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு ஒன்பது மணியளவில் முதலாவது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இடத்தில் துப்பர்ககிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் ஒருவர் உயிராபத்தான காயங்களுக்கும், மேலும் இருவர் பலத்த காயங்களுக்கும் உள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து ஏறத்தாழ ஒரு மணி நேர இடைவெளியின் பின்னர் இரண்டாவது சம்பவம் விக்டோரியா பார்க் அவென்யூ மற்றும் லோரன்ஸ் அவென்யூ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த இரண்டாவது சம்பவத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கத்திக் குத்து காயங்களுக்கு உள்ளான நிலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை தங்களுக்கு தெரியும் என்று பொலிஸார் கூறியுள்ள போதிலும், உடனடியாக எவரும் கைது செய்யப்படவில்லை.

மூன்றாவது சம்பவமும் கத்திக்குத்துச் சம்பவம் என்றும், சனிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் வெல்லஸ்லி தெரு மற்றும் ஷெர்போர்ன் தெரு பகுதியில் நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், ஆபத்தான காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நான்காவது சம்பவமும் கத்திக்குத்துச் சம்பவம் என்றும், ஃபின்ச் அவென்யூ ற்கு தெற்கே, ஜேன் தெரு மற்றும் ஃபிர்க்வோவ் க்ரெஸ்ஸன் பகுதியில் அதிகாலை நான்கு மணியளவில் அந்த சம்பவம் இடம்பெற்றள்ளது. இதில் காயமடைந்த நபர் குறித்த இரவில் கத்திக்குத்துக்கு இலக்கான 5ஆவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந்த மூன்றாவது மற்றும் நான்காவது சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை அதிகாலை நான்கு மணியளவில், லோரன்ஸ் அவென்யூ மற்றும் டஃப்பரின் தெரு பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது காரில் இருந்த ஒருவர் மீது பயணித்துக்கொண்டிருந்த பிறிதொரு காரில் இருந்தோரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்ப்ட்டதில் கையில் காயமடைந்த ஆண் நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபர்கள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *