ரொறன்ரோவில் மழையுடனான காலநிலை மாற்றமடையும் சாத்தியம்!

ரொறன்ரோ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை இன்று முடிவுக்கு வருமென சுற்றுசூழல் கனடா எதிர்வுகூறியுள்ளது.

வடகிழக்கு ரொறன்ரோ மற்றும் வடமேற்குப் பகுதியிலுள்ள பிரம்ப்டனில் கடந்த வாரங்களாக கடும் குளிருடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அத்தோடு நேற்று உறைபனி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த மழையுடனான காலநிலை இன்றுடன் நிறைவுக்கு வருவமென சுற்றுசூழல் கனடா எதிர்வுகூறியுள்ளது.

மேலும் இன்று (வெள்ளிக்கிழமை) ரொறன்ரோவில் கூடுதலாக 10 செல்சியஸ் காலநிலை காணப்படும் என்றும் சுற்றுசூழல் கனடா தெரிவித்துள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *