ஹோப்மன் டென்னிஸ் – அவுஸ்ரேலிய வீரர் மத்தியு எப்டென் வெற்றி!

ஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடரில் பிரான்ஸ் வீரரை வீழ்த்தி அவுஸ்ரேலிய அணி வீரர் மத்தியு எப்டென் வெற்றிபெற்றுள்ளார்.

8 நாடுகள் பங்கேற்கும் 2019 ஆண்டுக்கான ஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடர் நேற்று (சனிக்கிழமை) ஆரம்பமாகி ஜனவரி 5 வரை நடைபெறவுள்ளது.

இதில் குழு B க்கான போட்டிகள் நேற்று ஆரம்பமாகியது. இதில் இரவு வேளை அவுஸ்ரேலியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையில் இடம்பெற்றது.

இப்போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அவுஸ்ரேலிய வீரர் மத்தியு எப்டென் மற்றும் பிரான்ஸ் வீரர் லூகாஸ் பியூலி பலப்பரிட்சை நடத்தினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் செட்டை லூகாஸ் பியூலி 3-6 என கைப்பற்ற டை பிரேக் வரை அடுத்த செட்டில் 7-6 என கைப்பற்றி மத்தியு எப்டென் பதிலடி கொடுத்தார்.

இதன் பின்னர் இடம்பெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் போட்டியில் மத்தியு எப்டென் 6-2 என செட்டை கைப்பற்றினார்.

அதன்படி 3-6, 7-6, 6-2 என செட்டை கைப்பற்றி அவுஸ்ரேலிய வீரர் மத்தியு எப்டென் வெற்றிபெற்றார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *