ஹோப்மன் டென்னிஸ் – கிரீஸ் அணியை வீழ்த்தி பிரிட்டன் வெற்றி!

ஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடரில் கிரீஸ் அணியை வீழ்த்தி பிரிட்டன் அணி வெற்றி பெற்றுள்ளது.

எட்டு நாடுகள் பங்கேற்கும் 2019 ஆண்டுக்கான ஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடர் நேற்று (சனிக்கிழமை) ஆரம்பமாகி ஜனவரி 5 வரை நடைபெறவுள்ளது.

இதில் குழு B க்கான போட்டிகள் நேற்று ஆரம்பமாகியது. இதில் பகல் இடம்பெற்ற போட்டியில் பிரிட்டன் மற்றும் கிரீஸ் நாடுகளுக்கிடையில் இடம்பெற்றது.

அந்தவகையில் கிரேட் பிரிட்டன் வீரர் கேமரூன் நோரி மற்றும் கிரீஸ் டென்னிஸ் வீரர் ஸ்டபனோஸ் சிட்டிஸ்பாஸ் பலப்பரிட்சை நடத்தினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற குறித்த போட்டியில் முதல் செட் டை பிரேக் வரை நீடிக்க அதில் சிறப்பான விளையாடிய கேமரூன் நோரி 7-6 என கைப்பற்றினார்.

தொடர்ந்தும் சிறப்பாக விளையாடிய அவர் இரண்டாவது செட்டையும் 6-4 என கைப்பற்றி இலகுவாக வெற்றிகொண்டார்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற மற்றோரு போட்டியில் கிரீஸ் டென்னிஸ் வீராங்கனை மரியா சக்கரி மற்றும் பிரிட்டன் வீராங்கனை கேட்டி பவுல்டர் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினார். இதில் மரியா சக்கரி 6-0, 4-6, 6-2, என்ற கணக்கில் செட்டை கைப்பற்றி வெற்றி பெற்றார்.

இதனை தொடர்ந்து இடம்பெற்ற கலப்பு பிரிவில் கேமரூன் நோரி, பவுல்டரும் (பிரிட்டன்) – ஸ்டபனோஸ் சிட்டிஸ்பாஸ், மரியா சக்கரி (கிரீஸ்) மோதினார்.

இதில் சிறப்பாக விளையாடிய பிரிட்டன் அணி 4-3, 3-4(2), 4-3(4), என செட்களை கைப்பற்றி வெற்றி பெற்றது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *