ஹோப்மன் டென்னிஸ் – பிரான்ஸ் வீராங்கனையை வீழ்த்தி அஷ் பார்டி வெற்றி!

ஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடரில் பிரான்ஸ் வீராங்கனையை வீழ்த்தி அவுஸ்ரேலியா வீராங்கனை அஷ் பார்டி வெற்றிபெற்றுள்ளார்.

எட்டு நாடுகள் பங்கேற்கும் 2019 ஆண்டுக்கான ஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடர் நேற்று (சனிக்கிழமை) ஆரம்பமாகி ஜனவரி 5 வரை நடைபெறவுள்ளது.

இதில் குழு B க்கான போட்டிகள் நேற்று ஆரம்பமாகியது. இதில் இரவு வேளை அவுஸ்ரேலியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையில் இடம்பெற்றது.

இப்போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அவுரேலியா வீராங்கனை அஷ் பார்டி மற்றும் பிரான்ஸ் வீராங்கனை ஆலிஸா கோர்னெட் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினார்.

இதில் ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடிய அஷ் பார்டி முதல் செட்டை 7-5 என கைப்பற்றியதுடன் இரண்டாம் செட்டையும் 6-3 என கைப்பற்றினார்.

இதன் மூலம் 7-5 , 6-3 என செட்களை கைப்பற்றி அவுஸ்ரேலிய வீராங்கனை அஷ் பார்டி வெற்றிபெற்றார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *