700 நாட்களில் 7546 பொய் குற்றச்சாட்டுகள் – டொனால்ட் ட்ரம்ப் சாதனை

700 நாட்களில் 7546 பொய் குற்றச்சாட்டுகள் கூறி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சாதனை படைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து வொஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் 8 மாதங்களில், நாளொன்றுக்கு 5 பொய்கள் வீதம் 1,137 குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக கூறப்பட்டுள்ளது.

ஒக்டோபர் மாதத்தில், அமெரிக்காவில் இடைத்தேர்தல் நிகழ்ந்த சமயத்தில், 1,205 ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை டிரம்ப் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2018, டிசம்பர் 20- ஆம் திகதியுடன், ஜனாதிபதி ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்று 700 நாட்கள் நிறைவடைந்த நிலையில், அவர் இதுவரை 7,546 தவறான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *