கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பெத்லகேமிற்கு படையெடுக்கும் மக்கள் – அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு!

கிறிஸ்மஸ் பண்டிகைக்கான வழிபாட்டுக்காக, ஜேசு அவதரித்த பெத்லகேமில் ஏராளமானோர் திரண்டு வருவதால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜேசுபிரான் அவதரித்த நாளான கிறிஸ்மஸ் பண்டிகைக் கொண்டாட்டம் உலகம் முழுவதும் களைகட்டி வருகிறது.

ஜேசுபிரான் அவதரித்த சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட உள்ளன. இதில் பங்கேற்று பிரார்த்தனை செய்ய பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அங்கு திரண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக, அங்குள்ள தங்கும் விடுதிகளில் உள்ள அறைகள் அனைத்தும் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக பாலஸ்தீனிய சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிக எண்ணிக்கையில் மக்கள் திரள்வார்கள் என்பதால், அங்கு போதிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, ஏராளமான பொலிஸார் ரோந்துப் பணிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *