நயாகரா பகுதியில் பொலிஸாருடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது!

நயாகரா பகுதியில் பொலிஸாருடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடைய குற்றச்சாட்டில் மிசிசாகுவா பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் நயாகரா பிராந்திய பொலிஸார் இரவு 12:30 மணியளவில் அனஸ்தேசியா பொலிவாரில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றனர்.

இதன் போது இரு நபர்கள் குறித்த வீட்டுக்கு கீழ் தளத்தில் கட்டி வைக்கப்பட்ட நிலையில் இருந்ததுடன், அவர்களை கட்டிவைத்த 46 வயதான சந்தேகநபர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளான்.

இதன் பின்னர் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் குறித்த நபர் காயமடைந்தார். இந்நிலையில் குறித்த நபரையும் வீட்டின் அடித்தளத்தில் சிக்கிய நிலையில் இருந்த இரண்டு பேரையும் மீட்டு பொலிஸார் அவசர நிலையத்தில் அனுமதித்தனர்.

அந்தவகையில் மருத்துவமனையில் உள்ள அலெக்ஸாண்டர் ஜேசன் பேட்ஸ் மீது இரு கொலை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *