காதலியை அழைத்து நண்பர்களுடன் கூட்டு பலாத்காரம் செய்த கொடூரக் காதலன்…

பேஸ்புக்கில் தோழியாக அறிமுகமாக பெண்ணை தனியாக அழைத்துச் சென்று நண்பர்களுடன் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்து பெண்ணைக் கொலை  இளைஞனை போலீஸார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டத்தில்  உள்ள பேட்டை என்ற பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண். அவர் அங்குள்ள ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் படித்து வந்தார்.இவருக்கும் மேலசேவல் அருகே வாணியங்குளத்தைச் சேர்ந்த சுந்தர் என்பவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு பின் இருவரும் காதலிக்கத் தொடங்கினர். பின் போன் நம்பரை இருவரும் வாங்கிக்கொண்டு பேசி வந்துள்ளனர்.


 ஆறு மாத காலத்திற்கு மேல் நீடித்த இவர்களின் காதல் சமாச்சாரம் வெளியில் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் சம்பவத்தன்று இளம் பெண் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர் .
 

இதனையடுத்து  நாங்குநேரு அருகே உள்ள காட்டுப் பகுதியில் இளம்பெண்ணின் சடலம் கிடைப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அங்கு சென்று பார்த்த போது காணாமல் போனதாக கூறப்பட்ட பெண்ணின் சடலமே அது என்ற முடிவுக்கு வந்தனர்.


இதனையடுத்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சுந்தர் என்பவர் தம் நண்பர்களுடன் சேர்ந்து இளம் பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்து கொன்றது தெரியவந்தது.
 

இந்நிலையில் இளம்பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், சுந்தரை கைது செய்துள்ள நிலையில் அவனது நண்பர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

14Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *