ஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடர் – செரீனா வில்லியம்ஸ் வெற்றி

8 நாடுகள் பங்கேற்கும் ஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடரில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற போட்டியில் கிரீஸ் மற்றும் அமெரிக்க வீர, வீராங்கனைகள் மோதிக்கொண்டனர்.

இந்த தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றுள்ளார்.

கிரீஸ் வீராங்கனை மரியா சக்கரியை எதிர்கொண்ட அவர் டை பிரேக் வரை நீடித்த முதல் செட்டை போராடி 7-6 என கைப்பற்றினார்.

இதன் பின்னர் இடம்பெற்ற இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய செரீனா வில்லியம்ஸ் 6-2 என 2 ஆவது செட்டையும் கைப்பற்றி இலகுவாக வெற்றிபெற்றார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *