ஹோப்மன் கிண்ண டென்னிஸ் – ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிரீஸ் வீரர் ஸ்டீபானோஸ் சிட்டிஸ்பாஸ் வெற்றி

8 நாடுகள் பங்கேற்கும் ஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடரில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற போட்டியில் கிரீஸ் மற்றும் அமெரிக்க வீர வீராங்கனைகள் மோதிக்கொண்டனர்.

இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிரீஸ் வீரர் ஸ்டீபானோஸ் சிட்டிஸ்பாஸ் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த தொடர்பில் அமெரிக்க வீரர் பிரான்செஸ் டியாபோவை எதிர்கொண்ட அவர் முதல் செட்டை 6-3 என அவர் கைப்பற்றினார்.

இதன் பின்னர் டை பிரேக் வரை நீடித்த இரண்டாவது செட்டை 6-7 என அவர் தோல்வியை தழுவ, வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதி செட்டினை 6-3 என கைப்பற்றி வெற்றிகொண்டார்.

இறுதியில் 6-3 6-7(3) 6-3 என செட்டை கைப்பறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *