உயர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் பதவிப் பிரமாணம்Featured

உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஒருவரும் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (புதன்கிழமை) முற்பகல் இவர்கள் நால்வரும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அதன்படி. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பி.டீ.சூரசேன, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜா, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஈ.ஏ.ஜீ.ஆர்.அமரசேகர ஆகியோர் உயர் நீதிமன்ற நீதியரசர்களாக புதிதாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அத்தோடு, மேல்நீதிமன்ற நீதிபதி கே.பி.பெர்ணான்டோ மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்னவும் கலந்துகொண்டார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *