சி.வி.யின் ஆட்சேபனை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரிப்பு

1Shares

வடக்கு முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மீதான நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை எதிர்த்து அவரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் இரு மாகாணத்தின் முன்னாள் அமைச்சர்கள் ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை எதிர்வரும் 15ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையானது இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கானது வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் டெனீஸ்வரனினால் தாக்கல் செய்யப்பட்டது.

இதனை அடுத்து அவமதிப்பு குற்றச்சாட்டை எதிர்த்து விக்னேஸ்வரன் ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *