வெளிநாட்டில் இருந்து வந்தவர் மீது யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்!

1Shares

யாழ்ப்பாணம் வரணியில், வெளிநாட்டில் இருந்து வந்தவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கோயில் பிரச்சினை காரணமாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவரின் ஏவலில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் 48 வயதுடைய வேதராணியம் ஜெகதீசன் என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தாக்குதலுக்கு உள்ளான நபர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து தாயகம் திரும்பியுள்ளார். இதன் போது சொந்த ஊரில் உள்ள கோயில் ஒன்றின் பிரச்சினையில் தலையிட்டுள்ளார்.

அதன் போது வெளிநாட்டில் வசிக்கும் நபரொருவர், குறித்த நபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோயில் பிரச்சினை தொடர்பாக வாக்கு வாதப்பட்டதுடன், கொன்று விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

அந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) 12 நபர்கள் கொண்ட கும்பல் ஒன்று கோயிலில் பிரச்சினையில் தலையிட்டவரின் வீட்டுக்குள் புகுந்து, சரமாரியாக வாளினால் வெட்டியுள்ளனர்.

அதனை தடுக்க முற்பட்ட வயோதிப தாய் தந்தையையும் தள்ளி விழுத்தியுள்ளனர். அதன் பின்னர் அங்கிருந்து தாக்குதலை நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

அதையடுத்து வாள் வெட்டுக்கு இலக்கான நபர் அங்கிருந்து மீட்கப்பட்டு வரணி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையின் போது தாக்குதலுக்கு இலக்கானவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அதில், “நான் கோயில் பிரச்சினையில் தலையிட்டமை தொடர்பாக, வெளிநாட்டில் இருந்து ஒருவர் தன்னை தொலைபேசியில் மிரட்டியாதகவும் , அவரே இங்கே கூலிக்கு வாள் வெட்டுக்குழுவை அமர்த்தி தன் மீது தாக்குதல் மேற்கொண்டார்” என தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

1Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *