13.5 பில்லியன் டொலர் நிதி பற்றாக்குறை – நிதி அமைச்சர்

0Shares

இந்த ஆண்டில் ஒன்ராறியோவில் 13.5 பில்லியன் டொலர் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக பொருளாதாரம் பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதிக விற்பனை மற்றும் வருமான வரி மூலமான வருவாய், 1 பில்லியன் டொலராக காணப்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விக் ஃபெடெலி தெரிவித்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) விக் ஃபெடெலி, ஒன்ராறியோவின் 2018-19 மூன்றாம் காலாண்டு நிதி விபரங்களை வெளியிட்டார். இதன் போதே அவர் குறித்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை ஒன்ராறியோவின் நிதி பொறுப்பு அதிகாரி, பற்றாக்குறை உண்மையில் சுமார் $ 2.5 பில்லியனை விட குறைவாக உள்ளது என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *