மாகந்துர மதுஷின் சகாவின் வீட்டில் அதிரடிப்படையின் திடீர் சுற்றிவளைப்பு!

1Shares

மாகந்துர மதுஷ் நெருங்கிய கூட்டாளியான ஒருவரின் வீட்டில் (சப்புகஸ்கந்த) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, ஒரு வான் மற்றும் ஒரு ஜீப் வாகனங்கள் விசேட அதிரடி படையினரால் இன்று (புதன்கிழமை) கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த வாகனங்கள் போதை பொருள் வர்த்தகத்தில் இருந்து பெறப்பட்ட பணத்திலிருந்து வாங்கப்பட்டவை என சந்தேகத்திற்கிடமின்றி தெரியவந்துள்ளதாக விசேட அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மாகந்துர மதுஷ் உள்ளிட்ட 31 பேர் கடந்த 4 ஆம் திகதி டுபாயில் கைது செய்யப்பட்டனர்.

இதன் பின்னர் கடந்த நாட்களாக இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் சுற்றிவளைப்புக்களில், அவர்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தில் பலர் கைது செய்யப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *